உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம்

உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம்

உத்தரகோசமங்கை; - உத்தரகோசமங்கையில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சுயம்பு வராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 9:00 மணிக்கு மூலவருக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. தங்க கவசம் அணிவிக்கப்பட்டு எலுமிச்சை, செவ்வரளி மாலை சாற்றப்பட்டது. பழங்கள், கிழங்கு வகைகள் நெய்வேத்தியமாக படைக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் எலுமிச்சை மற்றும் தேங்காயில் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். கோயில் வளாகத்தில் உள்ள அம்மி கல்லில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !