உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்பகரத்தூர் மகாமாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

அம்பகரத்தூர் மகாமாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

புதுச்சேரி; காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட ஸ்ரீமகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 5ம் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலா வந்து குண்டம் முன்பு வந்தடைந்தார். பின்னர் கரகத்தை பின் தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கி மாரியம்மனை வழிபட்டனர். சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். விழாவில் தனி அதிகாரி மகேஷ், நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !