உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறிச்சி பொங்காளியம்மன் கோயில் மாசி திருவிழா துவக்கம்

குறிச்சி பொங்காளியம்மன் கோயில் மாசி திருவிழா துவக்கம்

போத்தனூர்: குறிச்சி குளக்கரையிலுள்ள பொங்காளியம்மன் கோவில் மாசி திருவிழா நேற்று காலை, கணபதி ஹோமம் தொடர்ந்து கோடியேற்றத் துடன் துவங்கியது. இன்று முதல் சிறப்பு பூஜை நடக்கிறது. 17ம் தேதி மாலை, 6:00 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், மறுநாள் காலை, 9:00 மணிக்கு மேல் தீர்த்தகுடம் அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனையும், மாலை, 5:00 மணிக்கு மேல் மாவிளக்கு வழிபாடும் நடக்கின்றன. 19ம் தேதி இரவு, 7:00 மணிக்கு மேல் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 20ம் தேதி மதியம், 12:00 மணிக்கு மேல் மறுபூஜை மற்றும் அன்னதானத்துடன் விழா நிறைவடைகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !