உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.


திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கத்திற்கு மாறாக, மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே திரண்டனர்.


நேற்று, வெயில் கொளுத்திய போதிலும், பக்தர்கள் மலைப்பாதையில் நடந்து வந்து, பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். திருத்தணி கூடுதல் எஸ்.பி., ஷுபம் திமான் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார், பஜார் மற்றும் மலைப்பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை போராடி சீரமைத்தனர். மலைக்கோவிலுக்கு, இருசக்கர வாகனங்கள் தவிர மீதமுள்ள அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால், கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்ட ஏழு பேருந்துகளில், பக்தர்கள் முண்டியடித்து ஏறிச் சென்றனர்.


சில பக்தர்கள், கொளுத்தும் வெயிலில் மலைப்பாதையில் நடந்து சென்றனர். முன்னதாக, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க வேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !