சபரிமலையில் தேசிய பேரிடர் தடுப்பு படையினர்!
ADDED :4690 days ago
சபரிமலை: சபரிமலையில், பக்தர்களுக்கு உதவி செய்யவும், ஆபத்து காலத்தில் உதவுவதற்காகவும், என்.டி. ஆர்.எப்., எனப்படும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர். வேலூர் மாவட்டம், அரக்கோணம், நான்காம் பட்டாலியனில் இருந்து வந்துள்ள இவர்கள், பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் போது, நெரிசலை ஒழுங்கு படுத்துவது, நோயால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் மயக்கம் அடைபவர்களை, மருத்துவமனைக்கு எடுத்து செல்வது போன்ற பணிகளை செய்கின்றனர். பக்தர்களுக்காக, சன்னிதானம் நடைப்பந்தலில், இந்தப் படையினர், மருத்துவமனையையும் துவக்கியுள்ளனர். 24 மணி நேரமும் செயல்படும் இந்த மருத்துவமனையில், தேவையான மருந்துகள் அனைத்தும், இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நான்கு டாக்டர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என, என்.டி.ஆர்.எப்., சபரிமலை பொறுப்பாளர் கூறினார்.