திருப்போரூர் கோவிலில் ரூ.42 லட்சத்திற்கு முடி ஏலம்
ADDED :4779 days ago
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், முடி ஏலம் 42 லட்சம் ரூபாய்க்கு விடப்பட்டது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் ஓராண்டிற்கான முடி சேகரிக்கும் உரிமை ஏலம் நடத்தப்படுகிறது. வரும் 2013ம் ஆண்டிற்கான முடி ஏலம், நேற்று மாலை நடந்தது. கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், ஆய்வாளர் அலமேலு, ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடத்தப்பட்டது. சென்னை அம்பத்தூரை சேர்ந்த ரவி, 42.15 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். கடந்த ஆண்டு முடி ஏலம் 36 லட்சம் ரூபாய்க்கு போனது. இந்த ஆண்டு, ஆறு லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.