உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் பகுதி கால பைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

நத்தம் பகுதி கால பைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.இதையொட்டி சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இதைப்போலவே கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் காலபைரவர் சன்னதியிலும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. இங்கும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !