/
கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் இருந்து கெங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் இருந்து கெங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம்
ADDED :214 days ago
காளஹஸ்தி: சித்தூர், ஐரால மண்டலம் காணிப்பாக்கம் சுயம்பு ஸ்ரீ வரசித்தி விநாயக சுவாமி கோயிலில் இருந்து பங்காருபாளையம் மண்டலம், போயகொண்டா வஜ்ராலபுரம் கெங்கையம்மன் கோயிலுக்கு பட்டு வஸ்திரங்கள், சீர் வரிசை பொருட்களை பூதலப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கலிகிரி முரளிமோகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் மணிநாயுடு, கோயில் கண்காணிப்பாளர் கோதண்டபாணி, அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள், பொதுமக்கள், பிரஜா பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.