உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா துவக்கம்

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா துவக்கம்

கன்னியாகுமரி; சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா, ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கியது.


சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும் வைகாசி இன்று (23ம் தேதி) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் திருக்கொடி ஏற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் அய்யாவழி சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !