கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :294 days ago
கோவை; வைகாசி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.இதில் சிறப்பு அலங்காரத்தில் வெங்கடேச பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
*வைகாசி இரண்டாவது சனிக்கிழமையைமுன்னிட்டு கோவை உக்கடம் லஷ்மி நரசிம்மர் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற கோவில் வளாகத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் சிலை முன்பு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.