/
கோயில்கள் செய்திகள் / புன்னாக கவுரி விரதம்; அம்மனை வழிபட மனதில் அமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்!
புன்னாக கவுரி விரதம்; அம்மனை வழிபட மனதில் அமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்!
ADDED :146 days ago
கவுரி விரதம் இருப்பவர்கள் சிறந்த புத்திரப் பேற்றையும், சகல செல்வங்களையும் பெறுவர். வறுமை நீங்கி நினைத்த காரியம் எல்லாம் கைகூடும். விரதம் இருக்கும் பெண்கள் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற்று, இல்வாழ்வில் கணவரோடு இணைபிரியாது வாழ்வது நிச்சயம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். வைகாசி வளர்பிறை பிரதமை திதியில் புன்னாக கவுரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. புன்னை மரத்தடியில் அல்லது புன்னை மரப்பூக்கள் மீது சிவன் பார்வதியை வைத்து பூஜிக்க வேண்டும். சிவாலயத்தில் அம்பாளுக்கும் விளக்கு போட்டு அர்ச்சனை செய்யலாம். இன்று அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட நோய்கள் நீங்கும்.