மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் முன்னை மரத்திற்கு பூஜை
ADDED :158 days ago
சாயல்குடி; சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவள நிறவல்லியம்மன் கோயிலில் ஸ்தல விருச்சமாக சங்க இலக்கியத்துடன் தொடர்புடைய அரிய வகை முன்னை மரம் உள்ளது. அமாவாசை தினத்தன்று முன்னை மரத்திற்கு பூஜைகள் நடக்கிறது. வைகாசி அமாவாசையை முன்னிட்டு முன்னை மரம் அருகே உற்ஸவமூர்த்திகளுக்கு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் முன்னோர்களை நினைத்து மோட்ச தீபம் ஏற்றினர்.