காஞ்சிபுரம் வரசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED :205 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாநகராட்சி, கோபால்சாமி தோட்டம், ஐதர்பட்டரை தெருவில், வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த தெருவாசிகள், திருப்பணி விழாக் குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 26ம் தேதி, காலை 9:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று மாலை 5:00 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு மஹா கும்பாபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடந்தது.