உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ரூ. 13 லட்சம் மதிப்பிலான பூஜை பொருள்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ரூ. 13 லட்சம் மதிப்பிலான பூஜை பொருள்

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ரூ. 13 லட்சம் மதிப்பிலான வெள்ளி பூஜை பொருட்களை திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்டது. உலக புகழ் பெற்ற சிதம்பரம் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோவிலுக்கு, 6 கால பூஜைகளுக்கு பயன்படுத்த மேருதீபம், வெண்சாமரம், நட்சத்திர தீபம், நகா தீபம், வியாக்ரதீபம், கும்ப தீபம் உள்ளிட்ட 16 வெள்ளி பூஜை பொருட்களை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார். இதனை பொது தீட்சிதர்களின் செயலாளர் சிவசந்தர தீட்சிதர் பெற்றுக் கொண்டார். 11 கிலோ 500 கிராம் எடை கொண்ட பூஜை பொருட்களின் மதிப்பு 13 லட்சம் ரூபாய் ஆகும். திருவாவடுதுறை ஆதீன கட்டளைதாரர் நடராஜ ரத்தின தீட்சிதர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !