உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி சோமவாரம்; சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு

வைகாசி சோமவாரம்; சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு

கோவை; வைகாசி மாதம் மூன்றாவது  சோம வார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் வி. என். தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வரர் சன்னதியில் உள்ள மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. இதில் வெண்ணிற வஸ்திரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


*கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவிலில் உள்ள அமிர்தகடேஸ்வரர் - பார்வதி தாயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் மற்றும் பார்வதி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !