அன்ன வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் வீதி உலா
ADDED :162 days ago
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் அன்ன வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார். எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. நேற்று காலை ராஜ மன்னார் அலங்காரத்தில் பல்லக்கில் வலம் வந்தார். இரவு சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மராக வைத்திருந்தார். தொடர்ந்து தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிலையில் பக்தர்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்கின்றனர். ஜூன் 8ல் மாலையில் தேரோட்டம் நடக்கிறது.