சேஷ வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் உலா
ADDED :226 days ago
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழாவில் சேஷ வாகனத்தில் பெருமாள் அருள் பாலித்தார். இங்கு பிரம்மோற்ஸவ விழா கொடி ஏற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று 11 தலையுடன் கூடிய புதிய சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். பின்னர் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். இரவு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று கருட வாகனத்தில் அருள்பாலிக்க உள்ளார்.