சோளிங்கர் யோக நரசிம்ம சுவாமி கோவிலில் வசந்த உற்சவ விழா
ADDED :167 days ago
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது 108 திவ்ய தேசங்களில் ஒன்றான யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். யோக நரசிம்மரின் உத்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் உள்ளது. விழா நாட்களில் பக்தோசித பெருமாள், மலைக்கோவிலுக்கு எழுந்தருளுவது வழக்கம். பக்தோசித பெருமாளுக்கு, கோடையில் வசந்த உத்சவம் நடத்தப்படுவதும் வழக்கம். கடந்த 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் கொண்டபாளையம் வசந்த மண்டபத்தில், பக்தோசித பெருமாளின் வசந்த உத்சவம் நடந்து வருகிறது. தினசரி காலை 10 மணிக்கு உத்சவ பெருமாள், வசந்த மண்டபத்தில் உள்புறப்பாடு எழுந்தருளுகிறார். மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்தவர்களும் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். 7ம் தேதியுடன் வசந்த உத்சவம் நிறைவு பெறுகிறது.