உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகாலம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசை

முருகாலம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசை

ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெரும்புதுார் அருகே, போந்துார் முருகாலம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் விழா, கடந்த 3ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, இரண்டாம் நாள் பூஜை, தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு சிறப்பு பூஜை, மஹா பூர்ணாஹீதியை தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் முருகாலம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மகா அபிஷேக தீபாராதனை நடந்து. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !