உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி விசாக விழா மே31 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை 5:40 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேர் நான்கு ரதவீதிகளை சுற்றி, நிலையை அடைந்தது. பொன்னம்பல அடிகள், அமைச்சர் பெரியகருப்பன் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !