உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி விசாக திருவிழா; பழநியில் குவிந்த பக்தர்கள்.. மாலை 4:30 மணிக்கு தேரோட்டம்

வைகாசி விசாக திருவிழா; பழநியில் குவிந்த பக்தர்கள்.. மாலை 4:30 மணிக்கு தேரோட்டம்

பழநி; பழநி, பெரியநாயகி அம்மன் கோயிலில் விசாகத் திருவிழாவில் நேற்று சுவாமிக்கு கல்யாணம் நடந்தது இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது


பழநி, கிழக்கு ரதவீதி, பெரியநாயகிகோயிலில் கொடி கட்டி மண்டபத்தில் வசந்த உற்ஸவமான வைகாசி விசாக விழா ஜூன் 3,துவங்கியது. விழா நாட்களில் தந்த பல்லாக்கு, தங்கமயில், காமதேனு, ஆட்டுக்கடா, தங்க குதிரை, வெள்ளி யானை, வெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. திருக்கல்யாணம்: நேற்று (ஜூன் 8) மாலை முன் மண்டபத்தில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். சிறப்பு ஹோமம், அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது. பூணூல் கல்யாணம், வஸ்திரம் அணிவித்தல் நடந்தது. பக்தர்களின் "அரோகரா" கோஷத்துடன் மாங்கல்யதாரணம் மணிக்கு நடைபெற்றது. மாலை மாற்றுதல் நடந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் இணை கமிஷனர் மாரிமுத்து, கண்காணிப்பாளர் அழகர்சாமி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேரோட்டம்: இன்று (ஜூன் 9,) அன்று மாலை 4:30 மணிக்கு வைகாசி விசாக தேரோட்டம் ரதவீதிகளில் நடைபெறும். அதன்பின் ஜூன் 12, அன்று திருஊடல் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !