உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்‌தது நடக்கும்; வைகாசி விசாகத்தில் குவிந்த பக்தர்கள்

குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்‌தது நடக்கும்; வைகாசி விசாகத்தில் குவிந்த பக்தர்கள்

காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் வைகாசி விசாக விழா நடந்தது. காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து சண்முகநாதப் பெருமான் வெட்டிவேர் அலங்காரத்தில் ஆதீனமட கொழு மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து, ஆதின மடத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தமிழ் மாலை நிகழ்ச்சியும், திருமுழுக்காட்டலும், பச்சை சாத்துப்படியும் பூஜையும் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அமைச்சர் பெரிய கருப்பன், புதுவயல் சுப. செல்லப்பனுக்கு அறமனச் செம்மல் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !