உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றி வேலாயுத சுவாமி கோவிலில் பால்குட ஊர்வலம்

வெற்றி வேலாயுத சுவாமி கோவிலில் பால்குட ஊர்வலம்

புவனகிரி; ஆதிவராகநத்தம் வெற்றி வேலாயுத சுவாமி கோவிலில் காவடி, பால்குட ஊர்வலம் நடந்தது.   புவனகிரி, ஆதிவராகநத்தம் வெற்றி வேலாயுத சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம் கடந்த 8ம் தேதி மாலை 6.00 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இன்று காலை 6:00 மணிக்கு வெள்ளாற்றில் இருந்து பக்தர்கள் 108  காவடி மற்றும் 108 பால் குடங்கள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர். பின், சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செங்குந்த மரபினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இதேப் போன்று, புவனகிரி, அழிச்சிகுடி பெரியமேடு முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு, பால்குடம் ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !