சாத்தமங்கலத்தில் புரவி எடுப்பு திருவிழா
ADDED :194 days ago
மேலூர்; சாத்தமங்கலத்தில் உள்ள அரிஹர புத்திர அய்யனார் கோயில் வைகாசி மாத திருவிழா இன்று துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் பக்தர்கள் இ.மலம்பட்டி குதிரை பொட்டலில் இருந்து புரவிகள், சப்த கன்னிகள், அம்மன் உள்ளிட்ட சிலைகளை 17 கி.மீ., தூரத்தில் உள்ள சாத்தமங்கலம் மந்தைக்கு கொண்டு சென்றனர். நாளை ( ஜூன் 10) மந்தையிலிருந்து புரவிகள் சின்ன, பெரிய அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பொங்கல் வைக்கப்படும். விழாவில் சாத்தமங்கலம் மற்றும் மேலூர் பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.