சிங்கப்பூரின் பழமையான சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :193 days ago
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் கேலாங் பகுதியில் அமைந்துள்ளது, பழமையான ஸ்ரீ சிவன் கோவில். கடந்த 1868ல் கட்டப்பட்டு, கோலாங் ஈஸ்ட் கோவில் என்றழைக்கப்படும் இந்தக் கோவிலில், 17 ஆண்டுகளுக்குப் பின், நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.