/
கோயில்கள் செய்திகள் / பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு
பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு
ADDED :185 days ago
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு நடைபெற்றது. பழநி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு நடைபெற்றது. சிவன் பார்வதிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதி ஆகியோர் கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். தொடர்ந்து திருஞானசம்பந்தர் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.