கமுதி சந்தன மாரியம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் விழா
ADDED :135 days ago
கமுதி; கமுதி அருகே கிளாமரம் கிராமத்தில் சந்தன மாரியம்மன்,பட்டதரசி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புபூஜை நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் அக்கினிசட்டி,பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் முன்பு கிராமமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். சந்தன மாரியம்மன், பட்டத்தரசி அம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாரதனை நடந்தது.முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி தூக்கி கிராமத்தின் முக்கிய வீதிகளில் பெண்கள் ஊர்வலமாக தூக்கிச் சென்று தண்ணீரில் கரைத்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் செய்தனர்.