உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வபுரம் பட்டத்தரசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

செல்வபுரம் பட்டத்தரசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கோவை; செல்வபுரம் பசுமை நகர் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவிலில் மகாபாலகணபதி, பால முருகன், முனியப்பன் சுவாமி, நாகர் ஆகிய சன்னிதிகளின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவானது கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது. தொடர்ந்து, முதல் கால பூஜையில் ஸ்ரீ ஹரிஹர ஸ்ரீனிவாச சுவாமிகள் கலந்து கொண்டு யாகத்தை துவக்கி வைத்தார். இரண்டாம் நாள் யாக பூஜையில் ரக்ஷாபந்தனன், காப்பு கட்டுதல், மகா சங்கல்பம், மூல மந்திர ஜெப ஹோமம்  நடைபெற்றது. 


மூன்றாம் நாள் பூஜையில் நவக்கிர ஹோமம் நடந்தது. நான்காம் நாள் ஐந்தாம் நாள் பூஜையில் சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம் ஆகியன நடைபெற்றது. தொடர்ந்து திருஷ்டி துர்கா ஹோமம், நாடி சந்தானம், 108 மூலிகை ஜெப ஹோமம் ஆகியன நடைபெற்றது.  நிறைவாக மூலவரின் சன்னதிக்குமேல் உள்ள ராஜகோபுரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து மூலவர் சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது. இதில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களுக்கு மகா அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பட்டத்தரசி அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !