உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுயம்பு மண்டு காளியம்மன் கோயிலில் குத்து விளக்கு பூஜை

சுயம்பு மண்டு காளியம்மன் கோயிலில் குத்து விளக்கு பூஜை

நெய்க்காரப்பட்டி; பழநி நெய்க்காரப்பட்டி, கே.வேலூர் சுயம்பு மண்டு காளியம்மன் உச்சி காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. பழநி, நெய்க்காரப்பட்டி, கே.வேலூர் சுயம்பு மண்டு காளியம்மன் உச்சி காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜூன் 6, பூக்குழி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 9, விநாயகர் விழா, ஜூன் 10ல் சண்முக நதியில் இருந்து பக்தர்கள் அழகு குத்தி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அன்று இரவு பூக்குழி வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 11, பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடைபெற்றது. பொங்கல் வைத்தல், முடி இறக்குதல், கிடா வெட்டுதல், பூச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். வானவேடிக்கை நடைபெற்றது. ஜூன் 13 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. கோயில் மண்டபம் பகுதி முழுவதும் குத்துவிளக்கு வைத்து பூஜையில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !