அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவில் உண்டியல் வசூல் ரூ. 89 ஆயிரம்
ADDED :182 days ago
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அதுல்ய நாதேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை இந்து சமய அறநிலையத்துறையால் என்ன பட்டது. அரகண்டநல்லூர் அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை என்னும் பணி கோவில் வளாகத்தில் நடந்தது. பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இதில் கலந்து கொண்டனர். அறங்காவலர் குழு உறுப்பினர் மாலதி, அறநிலையத்துறை ஆய்வாளர் பாலமுருகன், செயல் அலுவலர் அறிவழகன் முன்னிலையில் நடந்த பணியின் போது உண்டியலில் 89 ஆயிரத்து 845 ரூபாய் இருந்தது. அறங்காவலர் உமாமகேஸ்வரி, நகர மன்ற உறுப்பினர் குமார், அறநிலையத்துறை எழுத்தர் மிரேஷ் குமார் உடன் இருந்தனர்.