திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :136 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று வெளியூர்களில் இருந்து வந்த பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதுரையில் நேற்று நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தின் அனைத்து பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்தனர். அவர்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர். ஏராளமான பக்தர்கள் கைகளில் வேல் கொண்டுவந்து கோயிலில் பூஜை செய்து மாநாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.