உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயில் நித்ய அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை

காளஹஸ்தி சிவன் கோயில் நித்ய அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நடைபெறும் நித்ய அன்னதானத் திட்டத்திற்காக பெங்களூருவைச் சேர்ந்த பக்தர் பாலசுப்பிரமணியம் தம்பதியினர் கோயில் துணை செயல் அதிகாரி மோகன் என்பவரிடம் ரூ.1,00,000/- நன்கொடையாக வழங்கினார். முன்னதாக இவர்களுக்கு கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் செய்தனர். கோவிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப் பிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் இவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதங்களையும் சாமி படம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !