திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்
ADDED :141 days ago
ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அருகே திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். எல்லாபுரம் ஒன்றியம், சென்னங்காரணி கிராமத்தில், கடந்த 13ம் தேதி காலை கணபதி பூஜை, கொடியேற்றத்துடன், தீமிதி திருவிழா துவங்கியது. அன்று காலை திரவுபதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அடுத்தடுத்த நாட்களில் பகாசூர சம்ஹாரம், அர்ச்சுனன், திரவுபதி திருக்கல்யாண உத்சவம், நச்சுக்குழி யாகம், சங்காரபுரிக்கோட்டை நிகழ்வு, அர்ச்சுனன் தபசு, படுகளம் ஆகிய நிகழ்வுகள் நடந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில், கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் தீமிதித்தனர். இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.