வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :262 days ago
வடமதுரை; வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இன்று வருடாபிஷேக விழா நடந்தது. பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள் வைத்து புன்யாவஜனம், அக்னி, மகாலட்சுமி, லட்சுமிநரசிம்மர், பஞ்ச கந்த, சாந்தி யாக பூஜைகள் நடந்தன. பின்னர் மாலையில் திருக்கல்யாணம், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் தேவராஜ் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர்.