போரூர் ராமநாதீஸ்வரர் கோவிலில் ரூ.50 லட்சத்தில் திருப்பணி
ADDED :118 days ago
போரூர்; போரூர், ராமநாதீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடந்து வருகின்றன. போரூரில் உள்ள ராமநாதீஸ்வரர் கோவிலில் 2010ல் கும்பாபிஷேகம் நடந்தது. 2014ல் 21 அடி உயர ஐந்து நிலை ராஜகோபுரம், கொடி மரம் ஆகியவற்றுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளதால், கோவிலில் உள்ள நடராஜர், விநாயகர், முருகர், ஆஞ்சநேயர், அம்மன் ஆகிய சன்னிதிகளில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. ராஜகோபுரம், கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் வண்ணம் பூசுவது, கோவில் வளாகத்தில் கருங்கற்கள் தரை அமைப்பது உள்ளிட்ட திருப்பணிகள், உபயதாரர்கள் நிதி 50 லட்சம் ரூபாயில் நடந்து வருகிறது.