திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஆனி தெப்ப உத்சவம்; பக்தர்கள் தரிசனம்
                              ADDED :127 days ago 
                            
                          
                          
திருவள்ளூர்; திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஆனி முதல் நாள் தெப்ப உத்சவத்தில், உற்சவர் மும்முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, நேற்று மூலவர் வீரராகவ பெருமாள், கனகவல்லி தாயார், முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, முதல் நாள் தெப்பம் உற்சவம் நேற்று நடந்தது. மாலை 6:00 மணியளவில் உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினார். தெப்பலில், இரவு குளக்கரையை மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை தெப்ப உத்சவம் நடைபெறும். மூலவர் மற்றும் கனகவல்லி தாயார், முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.