உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

விருதுநகர்; விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் இன்று நடந்தது.


விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 16ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. விழாவையொட்டி  தினமும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 4ம் கால யாகசாலை பூஜை  முடிந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க காலை 7.05 மணிக்கு மேல் 7. 25 மணிக்கு ராஜகோபுரம்,  மூலஸ்தான விமானம், புதிய விநாயகர், முருகன், நடராஜர், சண்டிகேஸ்வரர் கோபுர விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலா நடைபெறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !