உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுப்பேட்டை கூத்தாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம்

புதுப்பேட்டை கூத்தாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி; புதுப்பேட்டை கூத்தாண்டவர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.


செஞ்சி அடுத்து புதுப்பேட்டை கிராமத்தில் பல நூறு ஆண்டு பழமையான விநாயகர், மாரியம்மன், திரவுபதி அம்மன், கூத்தாண்டவர் கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதை முன்னிட்டு 25ஆம் தேதி காலை 9 மணிக்கு யாக சாலை பிரவேசம், வாஸ்து பூஜை, கணபதி ஹோமம்,.கலச ஸ்தாபனம் நடந்தது. அன்று மாலை முதல் கால ஹோமமும், பூர்ணாஹூதியும் நடந்தது. 26ம் தேதி காலை 8 மணிக்கு மகா சாந்தி ஹோமம், இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதியும், இரவு சயன பூஜையும், சாமி கண் திறத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், நான்காம் கால யாகசாலை பூஜையும், 9 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9.30 மணிக்கு கடம் புறப்பாடும், 10 மணிக்கு கோவில் கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதில் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !