சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :139 days ago
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில், தீர்த்தம் அழைப்பு, புண்யாகவாஜனம், மகா சாந்தி ஹோமம், கலச ஸ்தாபனம், அங்க, உத்தர வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை, ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.