ஆனி செவ்வாய், சஷ்டி விரதம்; பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :141 days ago
கோவை; ஆனி மாதம் மூன்றாவது செவ்வாய் கிழமை மற்றும் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் விபூதி காப்பு அலங்காரத்துடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.