சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்
ADDED :112 days ago
சாத்துார்; சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. நேற்று காலை 10:20 மணிக்கு கோயில் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கொடியேற்றம், தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் வெங்கடாஜலபதி பல்லக்கு வெட்டிவேர் பல்லக்குசிறியகருட வாகனம், பெரிய கருட வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 10ல் நடக்கிறது. நேற்று நடந்த கொடியேற்று விழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.