வடமதுரை கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :261 days ago
வடமதுரை; வடமதுரை பகவதியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. ஜூலை 8ல் மகா கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் இன்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை முரளி சிவாச்சாரியார், நாராயணன் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் நடத்தினர். கரூர் எம்.பி., ஜோதிமணி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், பழனிச்சாமி, பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன், துணைத் தலைவர் மலைச்சாமி, செயல் அலுவலர் பத்மலதா, தி.மு.க., நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் சுப்பையன், காங்., வட்டார தலைவர்கள் ராஜரத்தினம், சாமிநாதன், கோயில் தக்கார் முத்துலட்சுமி, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார் பங்கேற்றனர்.