1000 ஆண்டு பழமையான செங்கல்பட்டு மண்ணீஸ்வரர் கோவிலில் திருப்பணி துவக்கம்
                              ADDED :111 days ago 
                            
                          
                          
செங்கல்பட்டு; செங்கல்பட்டு மாவட்டம் அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை மண்ணீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் துவங்கப்பட்டது.
1000 ஆண்டுகள் தொன்மையான மண்ணீஸ்வரர் கோவிலில் ரூ.45.20 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகளை தமிழக முதலமைச்சர்இன்று காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், செங்கல்பட்டு சட்ட மன்ற உறுப்பினர், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர், மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர், துணை ஆணையர்/செயல் அலுவலர் மாங்காடு செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர், சிறப்பு பணி செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள்,திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.