உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

கடலுார்; பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று (14ம் தேதி) காலை 7:00 மணிக்கு பிரம்மோற்சவ தேரோட்டம் நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 5ம் தேதி துவங்கியது. 6ம் தேதி த்வஜாரோகணத்தை தொடர்ந்து தினசரி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் பெருமாள் திருக்கல்யாண உற்சவம், கற்பக விருட்ச வாகனத்தில் வீதியுலா நடந்தது. நேற்று காலை காளிங்க நர்த்தனம், மாலை தொட்டி திருமஞ்சனம், குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று (14ம் தேதி) காலை 7:00 மணிக்கு பிரம்மோற்சவ தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !