/
கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்; மகன் கும்பிஷேகத்தில் பங்கேற்க வந்த மதுரை மீனாட்சி, சொக்கநாதர்
திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்; மகன் கும்பிஷேகத்தில் பங்கேற்க வந்த மதுரை மீனாட்சி, சொக்கநாதர்
ADDED :121 days ago
மதுரை; திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க, மதுரையில் இருந்து நேற்று இரவு சொக்கநாதருடன் மீனாட்சி அம்மன் புறப்பட்டு வந்தனர். வழிநெடுகிலும் கூடி நின்று வழிபட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் எழுந்தருள்வதற்காக, நேற்று இரவு 10:00 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி அதிகாலை திருப்பரங்குன்றத்தில் சேர்த்தியாகினர். இன்று கும்பாபிஷேகம் முடிந்தபின் மாலை 6:30 மணிக்கு அவர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்யகிரீஸ்வரர், பிரியாவிடை, கோவர்த்தனாம்பிகை அம்பாள் வீதியுலா நடக்கிறது.