உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசி: வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்!

வைகுண்ட ஏகாதசி: வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்!

சென்னை: வைகுண்ட ஏகாதசியையொட்டி, வைகை எக்ஸ்பிரஸ், ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும். வைகுண்ட ஏகாதசியையொட்டி, வைகை எக்ஸ்பிரஸ், இம்மாதம், 23ம் தேதியிலிருந்து, 25ம் தேதி வரை இருவழி மார்க்கத்திலும், ஸ்ரீரங்கத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.இம்மாதம், 23ம் தேதியிலிருந்து, 25ம் தேதி வரை, மைசூர் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சென்னை எழும்பூர்-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், திருச்சி-சென்னை எழும்பூர் இடையே மட்டும், ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !