திருச்சண்முகநாதபுரம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :180 days ago
பரமக்குடி; பரமக்குடி அருகே மேலாய்க்குடி திருச்சண்முகநாதபுரம் கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலில் ஜூலை 10 காலை அணுக்கை, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. ஜூலை 11 பல்வேறு பூஜைகள் நடந்து, ஜூலை 12, 13 இரண்டு நாட்கள் மூன்று காலயாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு நான்காம் காலயாக பூஜைகள் துவங்கி, மகா பூர்ணாகுதி நடந்தது. பின்னர் யாக சாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, விமான கலசங்களுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி, விசாலாட்சி காசி விஸ்வநாதர், சத்ரு சம்ஹார மூர்த்தி, மகாமேரு உள்ளிட்ட அனைத்து பரிவாரங்களுக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்