ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தெலுங்கானா கவர்னர் தரிசனம்
ADDED :97 days ago
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தெலுங்கானா கவர்னர் ஜெயிஷ்னுதேவ் வர்மா சுவாமி தரிசனம் செய்தார். நேற்று கோயிலுக்கு வந்த கவர்னரை ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல்ஜபார், கோயில் குருக்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்று அழைத்து சென்றனர். பின் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் கவர்னர், மனைவியுடன் தரிசனம் செய்தார். பிரசாதம் வழங்கப்பட்டது. பின் தனுஷ்கோடி சென்ற கவர்னர், இலங்கைக்கு ராமர் கட்டிய பாலம் உள்ள பகுதியை பார்த்து ரசித்தார். பின்னர் ராமேஸ்வரம் அருகே உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம் வந்த கவர்னரை அப்துல்கலாம் பேரன் சேக்சலீம் வரவேற்றார். கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கவர்னர், கலாமின் புகைப்படங்கள், மெழுகு சிலைகளை பார்த்தார்.