அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி முதல் சனி சிறப்பு அபிஷேகம்
ADDED :116 days ago
அன்னூர்; ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது இதில் ஸ்ரீதேவி - . பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த வெங்கடேச பெருமான். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பகவத் கீதை சொற்பொழிவு; இஸ்கான் இயக்கம் சார்பில், அன்னூர், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், இன்று மாலை 6:00 மணிக்கு பகவத் கீதை குறித்த சொற்பொழிவு நடைபெறுகிறது. இஸ்கான் அமைப்பின் மாவட்ட நிர்வாகி மது கோபால் தாஸ், பகவத் கீதை கூறும் கருத்துக்கள் குறித்து பேசுகிறார். இதை அடுத்து கிருஷ்ணர் பஜன் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்று கிருஷ்ணர் அருள் பெற நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.