உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் திருவாடிப்பூர உத்ஸவம் துவக்கம்; ஜூலை : 28ல் தேரோட்டம்

திருக்கோஷ்டியூரில் திருவாடிப்பூர உத்ஸவம் துவக்கம்; ஜூலை : 28ல் தேரோட்டம்

திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூலை28 ல் ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறும்.


சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் திருவாடிப்பூர உற்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். உற்ஸவம் துவக்கத்தை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு  பெருமாள்,ஆண்டாள் கல்யாண மண்டபத்தில் கொடிமரம் எதிரில் எழுந்தருளினர். காலை 1030 மணி அளவில் கொடிப்படமும், சக்கரத்தாழ்வாரும்  திருவீதி வலம் வந்தனர். தொடர்ந்து காலை 11:20  மணிக்கு பட்டாச்சார்யர்களால் கொடிப்படத்திற்கும் உற்ஸவருக்கும் பூஜைகள் நடந்து தீபாராதனைகள் நடந்தன. பின்னர் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேக,ஆராதனைகள் நடந்தன. நாளை முதல் தினசரி காலையில் திருவீதி புறப்பாடும், இரவில் வாகனங்களில் ஆண்டாள்,பெருமாள் திருவீதி உலாவும் நடைபெறும். ஜூலை 25ல் ஆண்டாள்,பெருமாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி மாலையில் சூர்ணாபிேஷகம் நடைபெறும். ஆண்டாள் பிறந்த திருநட்சத்திரத்தில் ஜூலை28 ல் தேரோட்டம் நடைபெறும். பதினொராம் திருநாள் ஜூலை 29 ல் காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும், இரவில் தங்கப்பல்லக்கில் ஆண்டாள்,பெருமாள் எழுந்தருளி ஆஸ்தானம் எழுந்தருளலுடன் உத்ஸவம் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !